
பிரபல போஜ்புரி நடிகை தற்கொலை செய்த வழக்கில், அவர் இறப்பதற்கு முன்னதாக நபர் ஒருவருடன் ஹோட்டலுக்கு வந்து செல்லும் சிசிடிவி காட்சியானது வெளியாகி இருக்கிறது. உத்தரபிரதேசம் வாரணாசியில் நடிகை ஆகான்ஷா துபே என்பவர் ஹோட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக அதிர்ச்சி தகவல் வெளியானது.
இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், நடிகை உயிரிழப்பதற்கு முன்னதாக அவருடன் சந்தீப் சிங் என்பவர் ஹோட்டலுக்கு வந்து செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. அந்நபர் துபேவுடன் ஹோட்டலில் 17 நிமிடங்கள் இருந்ததும், பிறகு காரில் புறப்பட்டு செல்வதும் தெரியவந்துள்ளது. தற்போது இதுபற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.