
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன், இப்போது மேடன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் மாவீரன் படத்தில் நடித்து உள்ளார். அதிதி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. அதன்பின் சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிகர் கமலின் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் SK21 படத்தில் நடிக்கவுள்ளார்.
சாய்பல்லவி நாயகியாக நடிக்க இருக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ அதிகாரியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அப்டேட்களுக்காக ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் மும்பையில் நடந்த விருது நிகழ்ச்சியில் மோஸ்ட் elegent personality என்ற விருதை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கப்பூரிடமிருந்து பெற்று உள்ளார். இதுகுறித்த புகைப்படம் வெளியாகி ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.
.@Siva_Kartikeyan on winning the @mirchimumbai presents Most Elegant Personality presented by @BoneyKapoor.#Sivakarthikeyan | #Maaveeran#PrinceSK pic.twitter.com/BFfml7IMxi
— Premkumar Sundaramurthy (@Premkumar__Offl) April 8, 2023