
நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தில் சமீபத்தில் 15வது தவணை விவசாயிகளின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டு வரும் நிலையில் இ கேஒய்சி பதிவு செய்த ஒவ்வொருவருக்கும் பணம் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
உங்கள் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டதா என்பதை சரி பார்க்க pmkisan.gov.in என்ற இணையதள பக்கத்தில் பயனாளிகள் பட்டியலில் மாநிலம், மாவட்டம், மண்டலம் மற்றும் கிராமத்தை தேர்வு செய்து உங்கள் கிராமத்தில் உள்ள பயனாளிகளின் பெயர்களை காணலாம். மேலும் சந்தேகங்களுக்கு 155261 அல்லது 011-24300606 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.