நவம்பர் 2024 முதல் காணாமல் போயிருந்த 59 வயது பெண் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணின் மருமகள் முதலில் மாமியாரை காணவில்லை என்று புகார் அளித்திருந்தபோதிலும், அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. மீண்டும், மார்ச் 10 அன்று, பெண்ணின் மருமகள் புதிய புகார் அளித்து, அவரை கொலை செய்திருப்பதாக சந்தேகம் தெரிவித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின் போது, அந்த வீட்டில் பழுது பார்க்கும் வேலை செய்ய வந்த பிளம்பர் (plumber) ஒருவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையின் போது, அந்த பெண் வீட்டில் தனியாக இருந்ததை பார்த்து, அவரை கொலை செய்ததாக அந்த பிளம்பர் ஒப்புக்கொண்டார். இந்த தகவலின் அடிப்படையில், போலீசார் அவரது வாக்குமூலத்தை பதிவு செய்தனர். மேலும், அந்த பிளம்பரின் தகவலை அடிப்படையாக கொண்டு, கொலை செய்யப்பட்ட பெண்ணின் சிதைந்த உடலை கண்டுபிடித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் இன்னும் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையின் பின்னணி காரணங்கள், பிளம்பரின் மற்ற எந்தத் தொடர்புகளும் உள்ளனவா என்பதைக் கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது. இந்த கொலை வழக்கு, அந்த பகுதியை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.