
பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் சுமார் 5000 கோடி மதிப்பில் நல திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக சென்னைக்கு வருகை புரிந்துள்ளார். சற்றுமுன் ஹைதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு வந்த பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி போன்றோர் வரவேற்றனர்.
இந்நிலையில் 2 நாள் பயணமாக தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்துள்ள பிரதமர் மோடி சென்னை விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தை சற்று நேரத்தில் திறந்து வைக்க இருக்கிறார். இதை தொடர்ந்து சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையத்திலிருந்து சென்னை-கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். அதன் பிறகு மயிலாப்பூர் விவேகானந்தர் மண்டபத்தில் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பிரதமர் மோடி உரையாற்றுகிறார். மேலும் பல்லாவரம் பகுதியில் பொதுமக்களை சந்தித்தும் பிரதமர் மோடி பேச இருக்கிறார்.