
கோவை போத்தனூரில் காவல் நிலையம் ஒன்று உள்ளது. அங்கு கடந்த 2018 ம் ஆண்டு புகார் ஒன்று அளிக்கப்பட்டது. அதில் எங்கள் மூத்த மகளை காதலிப்பதாக ஒருவர் வீட்டிற்குள் நுழைந்து இளைய மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் இது தொடர்பான புகைப்படங்களை காட்டி மீண்டும் மீண்டும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் என்று அவரது பெற்றோர் புகார் அளித்திருந்தனர். அதன்படி குமார் என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜார் படுத்தப்பட்டார். அப்போது நீதிபதி அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் தீர்ப்பளித்தார். இதை எதிர்த்து குமார் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீடு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுபவரின் மூத்த சகோதரியை குமார் காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் அப்பெண்ணை வேறொருவருக்கு திருமணம் செய்து வைக்க பேசப்பட்டது. இந்த திருமணத்திற்கு குமார் இடையூறாக இருப்பார் என்று கருதி தங்கையை வைத்து பொய்யாக பாலியல் புகார் கொடுத்துள்ளனர். எனவே அரசு தரப்பில் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து தண்டனை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி விசாரணையில் சாட்சிகளின் வாக்குமூலங்கள் முன்னுக்குப் பின் முரணாக இருந்தது. மேலும் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண்ணின் உடலில் பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக எந்த ஒரு ஆதாரம் இல்லை என்று மருத்துவ பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. இது தொடர்ந்து கைதான குமார் என்பவருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்து, அவருக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையையும் திருப்பி செலுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.