
உத்தர் பிரதேஷ் மாநிலம் காசியாபாத் பகுதியை சேர்ந்த இளைஞர் எக்ஸ் வலைதள பக்கத்தில் தனக்கு நடக்க இருந்த மோசடி குறித்து பகிர்ந்துள்ளார். ரிஷப் என்ற எக்ஸ் அக்கவுண்டில் அவர் பதிவிட்டிருந்ததாவது, அந்த இளைஞரின் தந்தைக்கு +92 என்று குறியீட்டுடன் தொடங்கும் எண்ணிலிருந்து அழைப்பு வந்துள்ளது.
அந்த எண்ணின் டிபியில் போலீஸ் அதிகாரி ஒருவரது புகைப்படம் இருந்துள்ளது. அந்த அழைப்பில் அவரது மகன் பாலியல் வழக்கில் சிக்கி உள்ளதாக கூறியதோடு வழக்கு பதியாமல் இருக்க ஒரு லட்சம் ரூபாய் உடனடியாக கொடுக்க வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளது.
அந்த சமயத்தில் இளைஞரின் தொலைபேசி எண் தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளதாக வந்துள்ளது. அந்த இளைஞரின் தந்தை சற்று பயந்தாலும் பணம் அனுப்பாமல் தவிர்த்துள்ளார். இதனை அந்த இளைஞர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
My father got a call from this number, with a dp of a police officer claiming I have been caught with a rapist and to protect me from media and FIR, he will need to pay him 1 lakh. At that exact moment, my number wasn't reachable.
Thankfully, my father did not give in. pic.twitter.com/Qw3ZKGLcXD
— Rishabh (@shekharrishabh8) December 27, 2023