சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேட்டில் தூத்துக்குடியைச் சேர்ந்த செந்தில் ராஜா என்பவர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது அலுவலகத்தில் குடும்ப வறுமை காரணமாக 16 வயது சிறுமி கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வேலையில் சேர்ந்தார். இந்நிலையில் செந்தில் ராஜா சிறுமியிடம் மாதம்தோறும் சம்பளம் வேண்டுமென்றால் தினமும் தனுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என மிரட்டியுள்ளார்.

மேலும் அடிக்கடி செந்தில் ராஜா சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி உறவினர்களின் உதவியுடன் கோயம்பேடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் செந்தில் ராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.