திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருமுருகன்பூண்டி எம்.ஜி.ஆர் நகரில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ரஞ்சித் குமார் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கும் கோபி அருகே இருக்கும் கிராமத்தில் வசிக்கும் 16 வயது சிறுமிக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.
இதனையடுத்து கடந்த 3 மாதங்களாக ரஞ்சித் குமாரும், சிறுமியும் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்தனர். அப்போது ரஞ்சித் குமார் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் தந்தை கோபி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ரஞ்சித் குமாரை கைது செய்தனர்.