சேலம் மாவட்டத்தில் உள்ள ஸ்டேட் பாங்க் காலனி திருஞானசம்பந்தர் தெருவில் கூட்டுறவு சங்கம் என்ற பெயரில் ஒரு நிறுவனம் செயல்பட்டது. இந்த நிறுவனத்தில் வேலை இருப்பதாக விளம்பரம் செய்தனர். மேலும் மாத சம்பளம் 45 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் டெபாசிட் தொகையாக 3 லட்ச ரூபாய் கட்ட வேண்டும் என அந்த விளம்பரத்தில் கூறியிருந்ததை நம்பி மேட்டூரில் வசிக்கும் நடராஜன்(36), நாயக்கன்பட்டி அடிக்கரை பகுதியில் வசிக்கும் சிவராஜ்(30) ஆகியோர் தலா 3 லட்ச ரூபாய் வீதம் 6 லட்ச ரூபாயை கட்டியுள்ளனர். ஆனால் அவர்களுக்கு வேலை வழங்கப்படவில்லை. இதுகுறித்து சிவராஜும், நடராஜனும் சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.