சேலம் மாவட்டத்தில் உள்ள சூரபள்ளி கிராமத்தில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கருப்பண்ணன் என்ற மகன் உள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கருப்பண்ணன் 16 வயது சிறுமியை கடந்த பிப்ரவரி மாதம் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் மாவட்ட சமூக நலவலர் ஜெனிபர் சோனியா ராணி விசாரணை நடத்திய போது கருப்பண்ணன் 16 வயது சிறுமி திருமணம் செய்து கொண்டது உறுதியானது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் கருப்பண்ணன் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.