கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் தளவாய்புரம் பகுதியில் வசிக்கும் செல்வ சித்ரா என்பவர் வடசேரி மேற்கு கிராம நிர்வாக அலுவலகத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவர் லஞ்சம் வழங்குவதாக நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தது. நேற்று லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜ் தலைமையிலான போலீசார் வடசேரி மேற்கு கிராம நிர்வாக அலுவலகத்திற்குள் நுழைந்து அதிகாரிகளின் செல்போன்கள், ஸ்மார்ட் வாட்ச் போன்ற பொருட்களை வாங்கி வைத்துக்கொண்டு தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் நடந்த சோதனையில் அதிகாரிகள் செல்வ சித்ராவின் பையில் இருந்த கணக்கில் வராத 17,853 ரூபாயை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண் அதிகாரி மீது குவிந்த புகார்கள்…. கணக்கில் வராத பணம் பறிமுதல்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!
Related Posts
Breaking: காலையிலேயே அதிர்ச்சி..!! பயங்கர விபத்தில் 2 பெண்கள் உட்பட 3 பேர் பலி… கடலூரில் பரபரப்பு..!!
கடலூர் மாவட்டம் ராமாபுரம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நேரு, கல்பனா மற்றும் சரண்யா ஆகியோர் இருசக்கர வாகனத்தில் கூலி வேலைக்காக சென்று கொண்டிருந்தபோது எதிரே…
Read moreதமிழகத்தில் அதிர்ச்சி..!! “லாரி மீது அடுத்தடுத்து வாகனங்கள் மோதி கோர விபத்து”… சிறுமி பலி… 5 பேர் படுகாயம்…!!!
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே வாணிசத்திரம் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தபோது திடீரென நின்றது. அப்போது பின்னால் வந்த வாகனங்கள் அடுத்தடுத்துமோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. அதன்படி ஒரு ஆட்டோ, மற்றொரு…
Read more