சேலம் மாவட்டத்தில் உள்ள அழகாபுரம் பகுதியில் இந்திரா பிரியதர்ஷினி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் கண்ணுசாமி, சுருதி திலக் ஆகியோர் இந்திராவிடம் 5 லட்ச ரூபாயை கடனாக வாங்கியுள்ளனர். ஆனால் கூறியபடி அவர்கள் பணத்தை திரும்ப கொடுக்கவில்லை.

இது தொடர்பாக இந்திரா பலமுறை கேட்டும் அவர்கள் காலம் தாழ்த்தி ஏமாற்றி வந்துள்ளனர். மேலும் இந்திராவுக்கு அவர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து இந்திரா அழகாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் கண்ணுசாமி, சுருதி திலக் ஆகியோர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.