கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மணலிக்கரை ஆண்டாம் பாறை பகுதியில் கிறிஸ்துதாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஜவுளி கடையில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு வலிப்பு நோய் இருந்ததால் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் தாஸ் தலையில் ரத்த காயத்துடன் அறையில் இறந்து கிடப்பதை கண்டு அவரது மகள் அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக தனது தந்தையை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் தாஸ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.