தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாரண்டஅள்ளி கணபதி நகரில் இளங்கோ என்பவர் வசித்து வருகிறார். இவரது டிரேடர்ஸ் கடையின் மேற்கூரை பலத்த காற்றினால் சேதமடைந்து காணப்பட்டது. நேற்று ஜக்க சமுத்திரத்தை சேர்ந்த வெங்கடேசன், மதன் ஆகிய இரண்டு வெல்டிங் தொழிலாளர்களும் மேற்கூரையை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக சிமெண்ட் சீட் உடைந்து வெங்கடேசனும், மாதனும் கீழே விழுந்தனர். இதில் படுகாயமடைந்த இரண்டு பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாதன் பரிதாபமாக உயிரிழந்தார். வெங்கடேசனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.