நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் மல்லிகா என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் வித்யா(21) கர்ப்பிணியாக இருக்கிறார். தற்போது வித்யா கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சரவணம்பட்டியில் இருக்கும் மகளிர் விடுதியில் தங்கி கல்லூரியில் பி.எட் படித்து வந்துள்ளார். நேற்று விடுதியில் இருந்த வித்யாவுக்கு கடுமையான வயிறு வலி ஏற்பட்டது. இதனால் அவரது தோழிகள் வித்யாவை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக வித்யாவை குரும்பபாளையத்தில் இருக்கும் மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்து டாக்டர்கள் வித்யா ஏற்கனவே உயிரிழந்த விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.