ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி அருகே இருக்கும் கொடிவேரி அணைக்கு கோவையை சேர்ந்த தமீம் என்பவர் தனது 3 நண்பர்களுடன் சுற்றுலா வந்துள்ளார். அப்போது தமீம் அளவுக்கு அதிகமாக மது குடித்துள்ளார். இதனால் அவரை காரில் படுக்க வைத்து விட்டு மற்ற நண்பர்கள் அணையில் குளிக்க சென்று விட்டனர். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது தமீம் உடல்நலம் பாதிக்கப்பட்டு கிடந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த நண்பர்கள் உடனடியாக அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் தமீம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.