கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை ஆர்.ஆர் குப்பம் வீதியில் விவசாயியான நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக அதே பகுதியில் நிலம் இருக்கிறது. இந்நிலையில் தங்கவேல் என்பவர் தனது தந்தை பழனிமுத்துடன் இணைந்து போலி ஆவணம் தயாரித்து நடராஜனுக்கு சொந்தமான இடத்தை பத்திரப்பதிவு செய்து அபகரித்தனர்.

இதனை தட்டி கேட்ட நடராஜனை தங்கவேல் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து கள்ளக்குறிச்சி நில அபகரிப்பு தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடராஜன் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் தங்கவேல் மற்றும் பழனிமுத்து ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.