கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நீலி கோணம்பாளையத்தில் தொழிலதிபரான சாஜித் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு தனியார் கல்வி நிறுவனத்தை தொடங்கியுள்ளார். அந்த நிறுவனத்தில் அஜய் மேனன் என்பவர் பங்குதாரராக இருந்துள்ளார். இந்நிலையில் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என கூறி அஜய் சாஜித்திடம் 1 கோடி 5 லட்ச ரூபாய் வாங்கியதாக தெரிகிறது.

இதனையடுத்து சாஜித் பலமுறை பணத்தை திருப்பி கேட்டும் அஜய் உரிய பதில் அளிக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சாஜித் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.