சேலம் மாவட்டத்தில் உள்ள தொளசம்பட்டி மிளகாய் காரன் காட்டுவளவு பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூங்கொடி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்களும், மனோன்மணி என்ற மகளும் இருந்துள்ளனர். இதில் மனோன்மணி பட்டப்படிப்பு படித்து முடித்து விட்டார். கடந்த 25-ஆம் தேதி வெளியான குரூப் 4 தேர்வில் மனோன்மணி குறைந்த மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.

இதனால் வேலை கிடைக்காது என்ற மன உளைச்சலில் நேற்று முன்தினம் தனது வீட்டில் விஷம் தின்று மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மனோன்மணி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.