
உத்திரபிரதேசம் சீதாபூரில் காங்கிரஸ் எம்.பி ராகேஷ் ரத்தோர் வீடு உள்ளது. இவர் தனது வீட்டிலிருந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துக் கொண்டிருந்தார். அப்போது காவல் துறையினர் அவரை சுற்றி வளைத்தனர். அதன் பின் அவரை கைது செய்து அழைத்து சென்றனர். ஏனெனில் திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண் ஒருவரை 4 ஆண்டுகளாக பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார்.
இதனால் அந்தப் பெண் கடந்த 17ம் தேதி அன்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி புகாரை ஏற்ற காவல்துறையினர் காங்கிரஸ் எம்.பி ரத்தோர் மீது வழக்கு பதிவு செய்தனர். 3 நாட்களுக்குப் பிறகு எம்.பி-யின் வழக்கறிஞர்கள் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். ஆனால் ஜனவரி 23ம் தேதி நீதிமன்றம் ரத்தோரின் முன்ஜாமீனை நிராகரித்தது. அதன் பின் அவர் கைது செய்யப்பட்டார்.