பொள்ளாச்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, வீடியோ எடுத்து மிரட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் 9 பேரை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை அனைத்தும் நிறைவடைந்த நிலையில் வருகிற மே 13ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி உத்தரவிட்டுள்ளார்.