
சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கின்றது. இது தொடர்பான அறிவிப்பு தகவலாக நேற்றே வெளியாகியிருந்த நிலையில், இன்றைய பள்ளி கல்வித்துறை சார்பில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கின்றது. அரையாண்டு தேர்வுகளைப் பொறுத்தவரை ஏழாம் தேதி முதல் தொடங்குவதற்காக பள்ளிக்கல்வித்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆனால் இந்த தேர்வுகள் நடத்துவதற்கான சாத்திய கூறுகள் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் இல்லை. இந்த நான்கு மாவட்டங்களிலே புயல் பாதிப்பு எதிரொலியாக தொடர்ந்து மழை பெய்து, அதன் காரணமாக இந்த மாவட்டங்களில் கடுமையான சேதங்கள், பாதிப்புகள் எல்லாம் உருவாகி இருக்கின்றது.
அரசு சார்பில் நிவாரண பணிகள் தீவிரமாக ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் மாணவர்கள் அடுத்த வாரம் நடைபெறக்கூடிய இந்த தேர்வுகளை எழுத முடியாத ஒரு சூழல் இருக்கிறது. ஏனென்றால் பல மாணவர்கள் சிறப்பு முகாம்களில் தங்கி இருக்கின்றார்கள். அவர்களுடைய பெற்றோர்கள் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
எனவே இந்த ஒரு வார காலத்தில் அவர்களால் படித்திருக்க முடியாது. இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு அரையாண்டு தேர்வுகள் 4 மாவட்டங்களுக்கு மட்டும் ஒத்திவைக்கப்படுகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு இந்த நான்கு மாவட்டங்களில் மட்டும் அரையாண்டு தேர்வுகளுக்கு பிறகு ஒரு தேதி அறிவிக்கப்பட்டு, அப்போது நடத்தப்படும. மற்ற மாவட்டங்கள் ஏற்கனவே திட்டமிட்ட தேதியில் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.