தமிழகத்தில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்விநியோகம் ரத்து செய்யப்படும். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படும். அந்த வகையில் இன்று சென்னை, திருச்சி, கரூர் மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் ஆனது ரத்து செய்யப்பட உள்ளது.

அதன்படி கரூர் மாவட்டத்தில், செல்வம் நகர், தில்லை நகர், போகவரத்து நகர், உப்பிடமங்கலம், சாலப்பட்டி, வேலாயுதம்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்வினியோகமானது ரத்து செய்யப்பட உள்ளது. இதேபோன்று கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள புட்டு விக்கி, கோவைப்புதூர், சுந்தராபுரம் பகுதி, குனியமுத்தூர், மந்திரி பாளையம், வதம்பச்சேரி, வட வேடம்பட்டி, மலப்பாளையம், குமாரபாளையம், பி ஜி பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் ரத்து செய்யப்படும்.

அதன் பிறகு ஆடையூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட ஆடையூர், புளியம்பட்டி, ஒருவப் பட்டி, குண்டத்து மேடு, ஒட்டப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்விநியோகம் ரத்து செய்யப்படும். இதேபோன்று தோப்பூர், தேவூர் மற்றும் அங்குலம் குறிச்சி ஆகிய துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும் மின்விநியோகம் ரத்து செய்யப்படும்.

இதனையடுத்து திருச்சி மாவட்டத்தில் உள்ள எரியப்பன் பட்டி, வெள்ளையப்பன் பட்டி, தொட்டியபட்டி, கோவில்பட்டி, சிப்கோ நிறுவனம், என்எஸ்கே என்ஜிஆர், கணேசபுரம், மேல வங்தவனம், எம்ஜிஆர் கிளை, தொண்டைமான் பட்டி, திருநெடுங்குளம், எழில் என்ஜிஆர், குமரேசபுரம், தேவராயன் ஏரி மற்றும் அய்யம்பேட்டை ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் ரத்து செய்யப்படும். மேலும் சென்னையில் புது வண்ணார்பேட்டை, கோயம்பேடு மற்றும் வில்லிவாக்கம் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதன் காரணமாக வில்லிவாக்கம் பகுதிகளுக்கு உட்பட்ட தெற்கு உயர்நீதிமன்ற காலனி, வடக்கு மற்றும் தெற்கு ஜெகநாதன் நகர், ராஜமங்கலம் மெயின் ரோடு, பாபர் ரோடு, வில்லிவாக்கம் சுற்று பகுதி, திருநகர், சிட்கோ தொழிற்பேட்டை, நேரு நகர், அம்மன் குட்டை, சிட்கோ நகர் 1 முதல் 10-வது பிளாக் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் ரத்து செய்யப்படும்.

அதன் பிறகு கோயம்பேடு பகுதிகளுக்கு உட்பட்ட புவனேஸ்வரி நகர், கிருஷ்ணா நகர், அழகாம்பாள் நகர், கோயம்பேடு, கோயம்பேடு மார்க்கெட் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்விநியோகம் ரத்து செய்யப்படும். மேலும் புது வண்ணாரப்பேட்டை பகுதிக்கு உட்பட்ட வடக்கு டெர்மினல் சாலை, டி எச் ரோடு பகுதி, ஜீவா நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்விநியோகம் ரத்து செய்யப்படும்.