உத்தர பிரதேஷ் மாநிலத்தில் உள்ள பகுதியை சேர்ந்த ஹரேந்திர குமார்(55) வீட்டில் மின்சாதனங்களை சரிசெய்தபோது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதனால் அவரது குடும்பம் மற்றும் உறவினர்கள் துயரத்தில் மூழ்கிய நிலையில், அவரது இறுதிச்சடங்குகள் தொடங்கப்பட்டன. அப்போது, உறுப்பினர்களுக்கு ஹரேந்திர குமாரின் வாழ்க்கை காப்பீட்டுத் திட்டத்தை பற்றி நியாபகம் வந்தது.

அந்த காப்பீட்டுத் தொகையை பெறுவதற்காக மரணபத்திரம் தேவையாக இருந்தது, எனவே அவரது உடலை பிரேத பரிசோதனை செய்யப்பட வேண்டும் என முடிவு செய்தனர். அதன்படி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு, இறுதி சடங்கு நடந்து கொண்டிருந்த சடலத்தை மீண்டும் எடுத்துச் சென்றனர். போலீசாரின் உதவியுடன், உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதன் பின்னர் உடல் குடுபத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த உடலுக்கு மீண்டும் இறுதி சடங்குகள் செய்தனர்.