
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வண்ணார்பேட்டையில் பெட்ரோல் பங்க் அமைந்துள்ளது. இந்த பெட்ரோல் பங்கில் டீசல் நிரப்புவதற்காக நேற்று தனியார் பேருந்தை டிரைவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் திடீரென பேருந்தின் கீழ் பகுதியில் இருந்து தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த டிரைவர் சாமர்த்தியமாக பேருந்தை வெளியே ஓட்டி சென்று உடனடியாக கீழே இறங்கினார்.
பின்னர் தீயணைப்பு கருவிகள் மூலம் தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.