
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று வங்கதேசம் மற்றும் இந்தியா இடையே டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்த இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக அஸ்வின் 102 ரன்கள் எடுத்து சதம் விளாசிய நிலையில் ஜடேஜா 86 ரன்கள் எடுத்தார். அதன் பிறகு ஜெய்ஸ்வால் அரை சதம் விளாசி இருந்தார். நாளை இரண்டாவது மேட்ச் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் இந்து மக்கள் கட்சியின் முன்னணி தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்டார் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திடம் டெஸ்ட் போட்டியை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கடிதம் கொடுத்துள்ளனர். அதாவது வங்கதேசத்தில் நடந்த வன்முறையில் இந்துக்கள் சிலர் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியானதால் டெஸ்ட் போட்டியை தடை செய்ய வேண்டும் என அர்ஜுன் சம்பத் கூறினார். இந்த கடிதத்தை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் பெற்றுக்கொண்ட போதிலும் தொடர்ந்து அவர் போராட்டம் நடத்தினார். மேலும் இதன் காரணமாக அர்ஜுன் சம்பத்தை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.