சென்னை சேப்பாக்கத்தில் IPL போட்டியை நேரில் பார்த்து ரசித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையடுத்து அ.தி.மு.க முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார் தன் டுவிட்டர் பக்கத்தில், சபரீசன்-ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பின் புகைப்படத்தை பகிர்ந்து பூனைக்குட்டி வெளியே வந்து விட்டதாக விமர்சனம் செய்துள்ளார். அதோடு தோனிக்கு பதில் தன்னை சிஎஸ்கே கேப்டனாக அறிவிக்கும்படி சேப்பாக்கம் மைதானத்துக்கு சென்று ஓ.பன்னீர்செல்வம் சிஸ்கே நிர்வாகத்துடன் சண்டையிட்டு கொண்டிருப்பதாகவும் சாடியுள்ளார்.

அவரை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் பல பேரும் ஓபிஎஸ் பின்னணியில் தி.மு.க இருப்பது தற்போது அம்பலப்பட்டிருப்பதாகவும், ஓபிஎஸ் அதிமுகவுக்கு தொடர்ந்து துரோகம் செய்தது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருப்பதாகவும் விமர்சித்து கொண்டிருக்கின்றனர்.