
புஷ்பா படம் வெற்றி பெற்ற பிறகு, அந்த படத்தின் 2ம் பாகமான புஷ்பா 2 திரைப்படம் கடந்த 5ம் தேதி வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் வெளியாகி முதல் நாளிலே ரூ. 294 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. முதல் 2 நாட்களில் ரூ.449 கோடி வசூல் செய்தது. 3வது நாள் முடியும் முன்பே, இந்த திரைப்படம் 500 கோடி ரூபாய் வசூல் செய்தது. புஷ்பா மற்றும் புஷ்பா 2 என 2 பாகங்களுமே மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, எந்த ஒரு இந்திய திரைப்படமும் படைக்காத சாதனையை படைத்துள்ளது. இந்த படத்தை இயக்குனர் சுகுமார் இயக்க வேண்டும் என்று முடிவு செய்யும்போது, அவரது நினைவில் இருந்தது அல்லு அர்ஜுன் இல்லை.
அதாவது இந்த படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடிக்க தெலுங்கு ஸ்டார் நடிகர் மகேஷ்பாபுவை அணுகியுள்ளார். இதுவரை நெகட்டிவ் ரோலில் நடிக்காத அவர், இந்த கதாபாத்திரம் தனக்கு நெகட்டிவாக அமைந்து விடக்கூடாது என்பதற்காக மறுத்துள்ளார். அதேபோன்று ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்தில் முதலில் அவர் நடிகை சமந்தாவை அணுகியுள்ளார். ஆனால் அவர் ஏற்கனவே ரங்கஸ்தலம் என்ற படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்ததால் அவரும் மறுத்துள்ளார். அதேபோன்று புஷ்பா படத்தின் முக்கிய வில்லான பகத் பாசில் கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குனர் முதலில் நடிகர் விஜய் சேதுபதியிடம் அணுகியுள்ளார். ஆனால் அவரிடம் டேட் இல்லாத காரணத்தினால் அவரால் இந்த படத்தில் நடிக்க முடியவில்லை.