13 ஆண்டுகளுக்கு முன்னர் எக்ஸ் கணக்கைத் திறந்திருந்த நடிகை சமந்தா, அதை தொடர முடியாமல் இருந்தார். சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, பெரும்பாலும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்றவற்றில் ஈடுபாடுடன் இருப்பார்.

எக்ஸ் கணக்கு இருந்தாலும், அதில் அதிகமாகத் தோன்றுவதில்லை. ஆனால் தற்போது, சமந்தா மீண்டும் எக்ஸ்-இல் புதுப்பித்த பதிவு ஒன்றை வெளியிட்டு தனது ரீ-எண்ட்ரியை செய்துள்ளார்.

 

2023ஆம் ஆண்டு, சமந்தா தனது ‘Tralala Moving Pictures’ என்ற நிறுவனத்தைத் தொடங்கியிருந்தார். தற்போது அந்த நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘Shubham’ என்ற திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளது.

இதைப்பற்றி எக்ஸில் பதிவு செய்த சமந்தா, “பெரிய கனவுகளுடன்… எங்கள் சிறிய காதலை உங்களிடம் கொண்டு வருகிறோம். இந்த படம் எனக்கு மிகவும் சிறப்பானது. இது ஒரு அருமையான தொடக்கம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது பார்த்த ரசிகர்கள், “Welcome back Sam”, “Queen is back” என வரவேற்கும் கமெண்ட்களால் சமூக வலைதளங்களில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளனர். எக்ஸில் அதிகம் ஆக்டிவாக இல்லாத போதிலும், 10.2 மில்லியன் பின்தொடர்பவர்கள் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.