
மதுரை தியாகராஜர் கல்லூரியில் இன்று நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அப்போது இதில் ஆளுநர் ரவி கலந்துக்கொண்டார். அப்போது மாணவர்களிடம் பேசிய அவர், மாணவர்களை ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கூற வைத்தார். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன்படி இதற்கு சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, ஆளுநர் என்ற மதசார்பற்ற அரசியல் சாசன உயர் பொறுப்பில் நீடிக்கும் தகுதி இவருக்கு சிறிதும் இல்லை என்பது தொடர்ந்து நிருபிக்கப்பட்டு வருகிறது. எனவே ஆளுநர் பொறுப்பிலிருந்து இவரை நீக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.