சென்னை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த கோபிநாத்-நித்யா தம்பதியரின் மகன் கிஷோர் (17). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளியில் சக மாணவர்களால் கிஷோர் அடிக்கடி உருவகேலி செய்யப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

இதனால் சம்பவ நாளன்று தனது தாயை தொலைபேசியில் அழைத்து தன்னை மன்னித்து விடுமாறு கூறிவிட்டு செல்போனை துண்டித்து விட்டு வேகமாக தனது வீட்டின் நான்காவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துள்ளார். இது குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிஷோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பின்  நடத்திய விசாரணையில் உருவக்கேலி செய்வது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் பெற்றோர்கள் பலமுறை புகார் அளித்தும் பள்ளி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததே தனது மகன் தற்கொலைக்கு காரணம் என தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து காவல்துறையினர் அப்பள்ளியில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சக மாணவர்களின் ராகிங் கொடுமையால் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.