
அக்டோபர் 5ஆம் தேதி நடிகை ரகுல் ப்ரீத்துக்கு நடந்த சம்பவம் அவருடைய ரசிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ஜிம்மில் பெல்ட் இல்லாமல் 80 கிலோவை தூக்கும் போது முதுகில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மருத்துவமனை அணுகிய நடிகை ரகுல் ப்ரீத் முழுவதுமாக ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளார். இதை அடுத்து நடிகை ரகுல் ப்ரீத்துக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதால் வலியை குறைக்க மருந்து எடுத்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.