
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்தது. கனமழையால் சென்னையில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கிய போதிலும் தமிழக அரசு முயற்சியால் விரைவில் மழை நீர் வடிந்தது.
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிவாரண பொருட்கள் மற்றும் உணவு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் மழை நீர் பாதிப்பு நடவடிக்கை குறித்து எடப்பாடி பழனிச்சாமி வெள்ளை அறிக்கை தொடர்பாக நிறுவர்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு உதயநிதி ஸ்டாலின் மழைநீர் எங்கும் தேங்காமல் விரைவில் மழை நீர் வடிந்தது தான் வெள்ளை அறிக்கை என பதிலடி கொடுத்தார்.