ரயிலில் பயணம் மேற்கொள்பவர்கள், அதுகுறித்த விதிமுறைகளையும் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். இதனிடையே விதிமுறைகள் நமக்கு தெரிந்திருந்தாலும் கூட, அவ்வப்போது அவை திருத்தப்படும் என்பதால் அதை சரிபார்த்துக்கொள்வது நல்லது. இந்நிலையில் ரயிலில் பயணம் செல்வோர் இரவில் நிம்மதியாக தூங்க ரயில்வே நிர்வாகம் புதிய விதிகளை வகுத்துள்ளது.

அந்த வகையில் ரயில் பயணிகள் இரவில் மொபைல் போனில் சத்தமாக பேசக்கூடாது. இதையடுத்து இயர்போன்கள் இல்லாமல் சத்தமாக பாடல்களை கேட்கக் கூடாது. 10 மணிக்கு மேல் தேவையில்லாமல் மின் விளக்குகளை எரிய விடக்கூடாது போன்ற விதைகளை ரயில்வே வகுத்துள்ளது. இந்த விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ரயில்வே தெரிவித்துள்ளது.