
ரயில்வேத்துறை எடுத்த ஒரு முக்கிய முடிவுக்குப் பின், ரயில்களின் த்ரீ டயர் ஏசி எகானமி கோச்சில் பயணம் மேற்கொள்வது மலிவானதாகி விட்டது. ஏசி பெட்டிகளின் கட்டணம் குறித்த பழைய முறையை நடைமுறைபடுத்த முடிவுசெய்யப்பட்டு இருப்பதாக ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புது விதி நடைமுறைக்கு வந்தபின், ஏசி 3 எகானமி கோச்சின் கட்டணம் ஏசி 3 கோச்சின் கட்டணத்தை விட குறைவாக இருக்கும். இம்முடிவு இன்று மார்ச் 22 முதல் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. முன்பே டிக்கெட் முன்பதிவு செய்திருக்கும் பயணிகளும் இந்த முடிவின் பலனை பெறுவார்கள் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அதாவது, ஆன்லைனிலும் கவுண்டரிலும் டிக்கெட் எடுத்த பயணிகளுக்கு ரயில்வே வாயிலாக பணம் திருப்பியளிக்கப்படும்.