ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் இன்று மோதுகிறது..

ஐபிஎல் 16வது சீசனின் 20வது லீக் ஆட்டம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் (டிசி) அணிகளுக்கு இடையே ஆர்சிபி அணியின் சொந்த மைதானமான எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று 3:30 மணிக்கு நடைபெறுகிறது.. இந்த சீசனில் இதுவரை இரு அணிகளின் பயணத்தைப் பார்த்தால், அது போதுமானது என்று சொல்ல முடியாது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ஆர்.சி.பி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சீசனை தொடங்கியது.

இதன்பின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அடுத்த 2 போட்டிகளிலும் தொடர் தோல்விகளை சந்தித்துள்ளது.கொல்கத்தா அணிக்கு எதிராக 81 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த அந்த அணி, லக்னோவுக்கு எதிரான கடைசி போட்டியில், கடைசி பந்தில் 1 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது. தற்போது அந்த அணி 2 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.

டெல்லி கேப்பிடல்ஸ் அணியைப் பற்றி பேசுகையில், இந்த சீசனில் இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. டேவிட் வார்னரின் தலைமையின் கீழ், இந்த சீசனில் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் ஆகிய இரண்டிலும் அந்த அணி மோசமாக தோல்வியடைந்துள்ளது. இதுவரை கேப்டன் வார்னர் மட்டுமே பேட்டிங் மூலம் அணிக்காக சில முக்கியமான இன்னிங்ஸ்களை விளையாடி வருகிறார். அதுவும் குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடுகிறார். காரணம் மற்ற வீரர்கள் சொதப்புகின்றனர். எனவே மற்ற வீரர்களும் அவருக்கு கைகொடுத்தால் மட்டுமே முதல் வெற்றியை இன்று ருசிக்க முடியும்..

பிட்ச் அறிக்கை : 

பெங்களூரு எம்.சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியின் ஆடுகளம் பற்றிப் பேசினால், அது பேட்டிங்கிற்கு முற்றிலும் பொருத்தமானது என்றே கூறலாம். இப்படிப்பட்ட நிலையில் இந்தப் போட்டியில் 200க்கு மேல் ஸ்கோரை காப்பது அந்த அணிக்கு எளிதான காரியமாக இருக்காது.. டாஸ் வென்ற அணி முதலில் பந்துவீச முடிவு செய்யும், இதனால் இலக்கை எளிதாக துரத்த முடியும். இதுவரை இந்த மைதானத்தில் விளையாடிய 83 ஆட்டங்களில் இலக்கை விரட்டிய அணி 46 முறை வெற்றி பெற்றுள்ளது.

விளையாடும் சாத்தியமான 11 வீரர்கள் : 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் : விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), மஹிபால் லோம்ரோர், கிளென் மேக்ஸ்வெல், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), வெய்ன் பார்னெல், வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், சித்தார்த் கவுல், முகமது சிராஜ்.

டெல்லி கேப்பிடல்ஸ் : பிருத்வி ஷா, டேவிட் வார்னர் (கே), மிட்செல் மார்ஷ், மணீஷ் பாண்டே, அக்சர் படேல், லலித் யாதவ், அபிஷேக் போரல் (வி.கீ.), கலீல் அகமது, குல்தீப் யாதவ், என்ரிக் நோர்கியா, முஸ்தாபிசுர் ரஹ்மான்.

போட்டி கணிப்பு : 

இந்த போட்டியின் முடிவு பற்றி பேசுகையில், இங்கே டாஸ் போட்டியில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இரு அணிகளின் ஃபார்மைப் பார்க்கும்போது, ​​ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தங்கள் ஹோம் கிரவுண்டில் முன்னிலை பெற்றதாகத் தெரிகிறது. ஆர்சிபி மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே இதுவரை நடந்த 28 ஆட்டங்களில் பெங்களூரு அணி 17 முறை வெற்றி பெற்றுள்ள நிலையில், டெல்லி அணி 11 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

அதேபோல இன்று இரவு 7:30 மணிக்கு மற்றொரு ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகிறது..