தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அனுஷ்கா செட்டி. இவர் நடித்த பாகுபலி திரைப்படம் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்திற்கு பிறகு ஒரு சில படங்களில் நடித்த அனுஷ்கா திரையுலகை விட்டு விலகி இருந்தார். இந்நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகை அனுஷ்கா தற்போது ஒரு நகைச்சுவை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மகேஷ் பாபு இயக்க யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக இருக்கும் நிலையில் படத்திற்கு மிஸ் செட்டி மிஸ்டர் பொலிசெட்டி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை அனுஷ்கா தன்னுடைய twitter பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த போஸ்டர் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.