சென்னை வானிலை மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் கூறியிருந்ததாவது, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கனமழை எச்சரிக்கையின் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர், விழுப்புரம் மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு அவசரகால செயல்பாட்டு மைய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதாவது நாகை மாவட்டத்திற்கு 1800 233 4233 என்ற எண்ணம், மயிலாடுதுறை மாவட்டத்திற்கு 0436422588 எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. திருவாரூர் மாவட்டத்திற்கு whatsapp எண் 9488547941, கடலூர் மாவட்டத்திற்கு whatsapp எண் 9489930520 அறிவிக்கப்பட்டுள்ளன. இது தவிர 1077 என்ற இலவச என்னும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்களுக்கு பொதுமக்கள் தொடர்பு கொண்டு அவசர உதவிக்கு அணுகலாம் என்று அரசு அறிவித்துள்ளது.