இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதள பயன்பாடு என்பது அதிகரித்துவிட்ட நிலையில் ரீல்ஸ் மோகத்தால் இல்லை இளைஞர்கள் உயிரைக் கூட பனையம் வைத்து விபரீதமான செயல்களில் ஈடுபடுகிறார்கள். சில சமயங்களில் இதனால் உயிர் போகும் அளவுக்கு விபரீதங்கள் ஏற்படுகிறது.

அந்த வகையில் தற்போது ரீல்ஸ் வீடியோவுக்காக இரு இளைஞர்கள் உயிரை விட்ட சம்பவம் குறித்தான செய்தி வெளியாகிய பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ராஜஸ்தான் மாநிலத்தில் இரு வாலிபர்கள் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது இருவரும் பைக்கில் நின்றபடி ரீல்ஸ் வீடியோ எடுத்தனர். அப்போது  திடீரென பைக் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த கார் மீது பயங்கரமாக மோதியதில் வாலிபர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். அந்த கார் ஓட்டுநர் காரை அங்கேயே விட்டுவிட்டு ஓடிவிட்டார். மேலும் இது குறித்தான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.