
இஸ்ரேல் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ஓராண்டு காலத்திற்கும் மேலாக பாலஸ்தீனம் காசாவிடம் தொடர்ந்து போரில் ஈடுபட்டு வந்தது. இந்த தாக்குதலில் இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் நடைபெற்ற போரில் சுமார் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தப் தாக்குதலில் காசா பகுதியில் வாழும் மக்கள் அடிப்படைத் தேவைகள் எதுவும் கிடைக்காமல் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் அனைவரும் மிகவும் பாதிக்கப்பட்டனர். இந்தப் போரை நிறுத்த உலக நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டு வந்தன. அதன்படி நீண்ட முயற்சிக்கு பின் கடந்த மாதம் முதல் போர் நிறுத்தம் செய்யப்பட்டது.
இது குறித்து இருதரப்பு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதனால் காசாவில் மெல்ல மெல்ல அமைதி திரும்பி கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இஸ்ரேல் கைதிகள் மற்றும் பாலஸ்தீனிய கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் இஸ்ரேலில் இருந்து பிணை கைதிகளாக 250க்கும் மேற்பட்டோரை ஹமாஸ் அமைப்பினர் பிடித்துச் சென்றனர். இதில் முன்னதாகவே 120 பிணை கைதிகள் விடுவிக்கப்பட்டு விட்டனர். இதனை அடுத்து 94 பிணை கைதிகள் உள்ளனர். இதில் 34 பேர் உயிரிழந்துவிட்டனர்.
தற்போது இஸ்ரேலியப் பிணைக் கைதிகளில் 3 பேரை ஹமாஸ் ஆய்த குழு விடுதலை செய்ய உள்ளது. அதன்படி இஸ்ரேலியப் பிணை கைதிகள் யாகர் ஹாரன்(46), அலெக்சாண்டர் ரூபேனோ(36), சஹோய் டிகேல் ஷென் ஆகியோரை ஹமாஸ் ஆய்த குழு விடுதலை செய்கிறது. இதனைத் தொடர்ந்து இஸ்ரேலிய அரசு 369 பாலஸ்தீனிய கைதிகளை விடுதலை செய்கிறது. இதில் 36 பேர் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட ஆயுள் தண்டனை கைதிகள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதுவரை 21 பேரை ஹமாஸ் அமைப்பினர் விடுதலை செய்துள்ளனர். அதற்கு பதிலாக 250க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியக் கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்துள்ளது.