
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி பேருந்து நிறுத்த பகுதியில் இருக்கும் கடைகளுக்கு முன்பு இருக்கும் இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் அறந்தாங்கி நகராட்சி ஊழியர்கள் பேருந்து நிறுத்தம் மற்றும் அதற்கு பின்புறம் இருக்கும் பகுதியில் உள்ள கடைகள் முன்பு ஆக்கிரமித்து கட்டி வைத்திருந்த குடிசை உள்ளிட்டவற்றை அகற்றினர்.