தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஆம்பர் பேட்டை பகுதியில் சாய் பாபா நகர் தெருவில் வசித்து வந்தவர் லிங்கா ரெட்டி (80). இவருக்கு ஊர்மிளா தேவி (75) என்ற மனைவி இருந்துள்ளார். லிங்கா ரெட்டி ஒரு ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் ஆவார். லிங்கா ரெட்டி ஊர்மிளா தேவி தம்பதியினருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். 2 பெண்கள் திருமணம் ஆகி அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். கடைசி பெண் வெளியூரில் வசித்து வருகிறார். இந்த நிலையில் பெற்றோர்கள் இருவரும் தங்களது குழந்தைகளுடன் தினமும் தொலைபேசியில் பேசுவதை வழக்கமாக வைத்திருந்தனர்.

இந்தநிலையில் லிங்கா ரெட்டியும், ஊர்மிளா தேவியும் கடந்த 3 நாட்களாக பெற்றோர்கள் அமெரிக்காவில் உள்ள மகள்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொள்ளாததால். சந்தேகத்தில் அருகில் உள்ளவர்களுக்கு மகள்கள் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். உடனே அருகில் உள்ளவர்கள் வீட்டில் சென்று பார்த்தபோது லிங்கா ரெட்டியும் அவரது மனைவியும் படுக்கை அறையில் கொடூரமாக இறந்து கிடந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து உடனே காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் பார்த்தபோது லிங்கா ரெட்டியும் அவரது மனைவியும் தலையில் அடித்து கொலை செய்தது தெரியவந்தது. மேலும் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றர். இந்த விசாரணையில், முதல் கட்டமாக சொத்து பிரச்சனையால் இருவரும் கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. மேலும் படுக்கையறைகளில் ரத்தம் உறைந்து கிடந்ததால் இருவரும் மூன்று நாட்களுக்கு முன்பே கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவித்தனர். அப்பகுதியில் சிசிடிவி கேமரா சரியாக இயங்காததால் குற்றவாளிகளை கண்டறிவது சற்று தாமதம் ஏற்படுகிறது. மேலும் இந்த கொலை வழக்கு குறித்து 4 தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என கூறினர். கணவன், மனைவி இருவரும் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.