
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை சேர்ந்த ஜெபராஜ் ஜான் வெஸ்லி(61) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆவர். இந்நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு இவரது வீட்டிற்கு பிளம்பர் வேலைக்காக ஜீவராஜ் (55) என்பவர் வந்துள்ளார். அப்போது ஜெபராஜ் வீட்டில் தனியாக இருப்பதைக் பார்த்து அவரை கட்டையால் தாக்கி கொன்றுவிட்டு அங்கிருந்த 28 பவுன் தங்க நகைகள் மற்றும் 6000 ரூபாய் பணத்தை கொள்ளை அடித்து தப்பி சென்றார்.
இது குறித்து புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஜீவராஜையும், தங்க நகைகளை விற்க உதவியாக இருந்த பிரேம்குமார் (52) என்பவரையும் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி முதலாவது கூடுதல் அமர்வு நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜீவராஜ்-க்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.