ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியின் கேப்டனாக கிட்டத்தட்ட 7 வருடங்களாக செயல்பட்டு வந்தவர் ரிக்கி பாண்டிங். இவர் தற்போது பஞ்சாப் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஓய்வு பெற்ற நிலையில் கௌதம் கம்பீர் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அந்த சமயத்தில் ரிக்கி பாண்டிங் உள்ளிட்டோரும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என்று கூறப்பட்டது.

ஆனால் ரிக்கி பாண்டிங் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பம் இல்லை என்று கூறினார். இந்நிலையில் தற்போது  பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ஒவ்வொரு சீசனிலும் பஞ்சாப் அணி பயிற்சியாளரை மாற்றி வரும் நிலையில் அடுத்த வருடம் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ஆவது கோப்பையை வெல்லுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.