69வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில், சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ‘RRR’ படத்திற்காக எம்.எம்.கீரவாணி மற்றும் ‘புஷ்பா’ படத்திற்காக தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோர் பெருகின்றனர். இந்த விருதை இருவரும் பகிர்ந்து கொள்கின்றனர். அதே போல் சிறந்த சண்டைப்பயிற்சிக்காக ‘RRR’ படம் விருது பெறுகிறது. அதே போல் சிறந்த நடனப் பயிற்சிக்கான விருதையும் ‘RRR’ படம் பெறுகிறது. இப்படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் ஏற்கனவே ஆஸ்கர் விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.

சிறந்த தமிழ் திரைப்படம் – கடைசி விவசாயி (2021)

சிறந்த மலையாளம் திரைப்படம் – ஹோம் (2021)

சிறந்த கன்னடம் திரைப்படம் – 777 சார்லி (2022)

சிறந்த தெலுங்கு திரைப்படம் – உப்பெனா (2021)