
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் கூடுதல் பயனாளிகள் நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், கடந்த செப்டம்பர் 15ஆம் நாள் பேரறிஞர் பெருந்தகை அறிஞ்சர் அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் இந்த திட்டத்தை தொடங்கி வச்சேன். செப்டம்பர் 15 மற்றும் அக்டோபர் 15 என ரெண்டு மாசத்துக்கான 2000 ரூபாயை ஒரு கோடியே ஆறு லட்சம் சகோதரிகள் வாங்கிட்டாங்க.
மகளிர்க்கு சொத்துரிமை, கல்வி, வேலை வாய்ப்பு, உள்ளாட்சி அமைப்புகளுக்கு இட ஒதுக்கீடு,கொடுத்து… உங்களின் உரிமைகளுக்கான பாதுகாவலராக இருக்க கூடிய தமிழின தலைவர் கலைஞருடைய நூற்றாண்டில் தொடங்கி கொடுக்கக்கூடிய தொகை இந்தத் தொகை. இது உதவி தொகை இல்ல, உரிமை தொகை.
இந்த உரிமை தொகை உண்மையிலேயே தேவையும், தகுதியும் உள்ள அனைத்து மகளிர்க்கும் பொய் சேரனும் என்பதில் நம்ம அரசு ரொம்ப கவனமாக இருந்தது. VAO ஆபீஸ், தாலுகா ஆபீஸ்ன்னு எங்கேயும் போயி அலைச்சல் படாமல், பொதுமக்களுக்கு எந்த சிரமமும் இல்லாமல் இருக்கனும்னு அரசே உங்ககிட்ட வந்து விண்ணப்பங்களை எப்படி வாங்கினாங்களோ,
அதே மாதிரி அந்த விண்ணப்பம் வாங்குறதுக்கு முகாம்களை அமைக்க சொன்னேன். கடந்த ஜூலை 24ஆம் தேதி தர்மபுரி மாவட்டம் தோப்பூரில் அந்த முகாம் நானே நேரில் போய் தொடங்கி வைத்தேன். ஏறக்குறைய ஒரு கோடியே 63 லட்சம் மகளிர் விண்ணப்பித்தார்கள். இதற்கும் சிலர் விமர்சனம் செய்தார்கள். தகுதி உள்ள மகளிருக்கு உரிமை தொகை வழங்கப்படும் என சொன்னதை தேர்தல் வாக்குறுதிக்கு முரணா செய்யறாங்கன்னு பேசினாங்க.
நாம தொடக்கத்தில் இருந்தே தெளிவா சொன்னோம்…. தகுதி உள்ளவர்கள் யார் ? நேர்மையான – பாரபட்சமற்ற – விதிமுறைகள் அடிப்படையில் அரசு சார்பில் வெளியிட்டு, தமிழ்நாட்டில் இருக்கிற அத்தனை குடும்ப அட்டதாரர்களையும் விண்ணப்பிக்க சொன்னோம். இந்த திட்டத்தோட நோக்கத்தையும், விதிமுறைகளையும் மக்கள் உள்ளார்ந்து புரிஞ்சுகிட்ட காரணத்தால 2 கோடி 24 லட்சம் குடும்ப அட்டைதாரர்களில் ஒரு கோடியே 63 லட்சம் மகளிர் மட்டும் விண்ணப்பிச்சாங்க.
மக்களுடைய இந்த புரிதலே இந்த திட்ட விதிமுறைகளுக்கான நியாயத்தை காட்டுச்சு. விமர்சிச்சவுங்க அமைதி ஆயிட்டாங்க. இப்படி விண்ணப்பித்தவர்களில் இருந்து ஒரு கோடியே 6 லட்சத்து 58 ஆயிரத்து 375 தகுதி உள்ள மகளிர் தேர்ந்தெடுக்கப்பட்டு… எல்லோருக்கும் அவங்களோட வங்கி கணக்குல இந்த திட்டத்திற்கு ஒரு நாள் முன்னாடியே செப்டம்பர் 14ஆம் தேதி அந்த மாசத்துக்கான உரிமை தொகையான 1000 ரூபாய் நாம வரவு வச்சோம்.
அந்த மாசம் வங்கி கணக்கில் இல்லாத இரண்டு லட்சத்து 42 ஆயிரத்து 956 பணியாளர்களுக்கு மணி ஆர்டர் மூலம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. அடுத்த அக்டோபர் 15ஆம் தேதி வங்கி கணக்கில் வரவு வச்சோம். மணி ஆடர் மூலம் உரிமை தொகை வழங்கப்பட்ட மகளிருக்கு வங்கி கணக்கு தொடங்க நடவடிக்கை எடுத்துக்கிட்டு இருக்கோம் என தெரிவித்தார்.