
மகளிர் காண ரூபாய் ஆயிரம் உரிமைத் துறை திட்டம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்க உள்ளது. தமிழக அரசு தகுதியானவர்களின் வரைமுறைகள் குறித்த குறித்து விரைவில் வெளியிட உள்ளதாக தகவல்.
ஏழை – எளிய – நடுத்தர குடும்ப பெண்களுக்கு ரூபாய் 1000 உரிமைகத்தொகை சென்றடைய வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. PHH என்ற வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு உரிமை தொகை கிடைக்கும். 35 கிலோ அரிசி வாங்கும் PHAAY குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000 உரிமைத்தொகை நிச்சயம் கிடைக்கும்.
புதுமைப்பெண் திட்டத்தில் பயனடையும் கல்லூரி பெண்களின் தாயாருக்கும் உரிமை தொகை கிடைக்கும். மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற ரேஷன் அட்டையில் மாற்றம் ஏதும் செய்யத் தேவையில்லை. தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டவுடன் அவரவர்களின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக பணம் செலுத்த அரசு சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது
யாருக்கெல்லாம் மகளிர் உரிமை தொகை கிடைக்காது ? :
வருமான வரி செலுத்துபவர்கள், மத்திய – மாநில அரசு ஊழியர்களுக்கு உரிமை தொகை கிடைக்க வாய்ப்பு இல்லை. ஏற்கனவே 1000 ரூபாய் உதவி தொகை திட்டத்தில் பயன் பெற்று வரும் பெண்களுக்கு கிடையாது. மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் ஆகியோர் இத்திட்டத்தின் கீழ் உரிமை தொகையை பெற இயலாது என தகவல். அரசு ஊழியர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 1000 உரிமைகளை கிடைக்க வாய்ப்பு குறைவு.