ஆந்திரா மாநிலம் திருப்பதியில் உள்ள கானஹஸ்தி அருகே வனப்பகுதி ஒன்று உள்ளது. அங்கு செம்மரக்கடத்தல் நடைபெறுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்படி அதிரடிப்படை போலீசார் நடத்திய வாகன சோதனையில் ரூ.2.5 கோடி மதிப்பிலான 72 செம்மர கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அதோடு கடத்தலில் ஈடுபட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உட்பட 7 பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களிடம் இருந்த கார், லாரி போன்ற வாகனங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.