
2018 ஆம் ஆண்டு பிரதமர் மோடி முதன் முதலாக 70 வயது மேற்பட்டவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரையில் கட்டணம் இல்லாமல் மருத்துவம் வழங்கும் காப்பீடு திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு உலக முதியோர் நலம் மேற்பார்வை என்ற அமைப்பு மூலம் முதியோர் நலத்திட்டம் குறித்து 91 நாடுகள் அடங்கிய பட்டியலை வெளியிட்டனர். சிறப்பான முதியோர் நலத்திட்டம் வரிசையில் இந்தியா 73-வது இடத்தை பெற்றுள்ளது. ஏற்கனவே 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 8.6% மேல் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் இருந்தனர், இந்த கணக்கெடுப்பின்படி 2050-ல்முதியவர்களின் எண்ணிக்கை 19.6%அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்னும் 25 ஆண்டுகளில் இந்தியாவில் முதியோர்களின் எண்ணிக்கை 10.3 கோடியில் இருந்து 31 கோடியாக அதிகரிக்கும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் முதியவர்களுக்கு தனியார் காப்பீடு கிடைப்பதில் சிக்கல் அதிகமாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதால் முதியவர்களின் மருத்துவ தேவையை ஈடு செய்யும் வகையில் இந்த ஆயுஸ்மான் பாரத் பிரதம மந்திரி ஜன் ஆரோக்யத் திட்டம் (Ayushman Bharat Yojana) அமைந்துள்ளது.
இந்த காப்பீடு திட்டத்தில் 70 வயது மேற்பட்ட அனைவரும் பயனடைய முடியும். இந்த காப்பீடு திட்டத்தினால் நாடு முழுவதிலும் உள்ள 6 கோடி மூத்த குடிமக்கள் 5 லட்சம் வரை கட்டணமில்லா மருத்துவம் பெற்று பயனடைவார்கள். நாடு முழுவதிலும் உள்ள 30,000 மருத்துவமனைகளில் இந்த மருத்துவ திட்டத்திற்காக பட்டியல் படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்திற்கு மத்திய அரசு சார்பில் 60% தொகையும், மாநில அரசு சார்பில் 40% தொகையும் வழங்கப்படுகிறது.
இந்த AB – PMJAY காப்பீடு திட்டம் பெறுவது எப்படி?
- 70 வயது நிரம்பியவர்கள் தகுதி பெற்றவர்கள் ஆவார்கள்.
- மேலும் www.beneficiary.nha.gov.in என்ற இணையதளம் அல்லது ஆயுஷ்மான் செயலியில் பதிவு செய்ய வேண்டும்.
- ஆதார் கார்ட்ரேஷன் கார்டு போன்ற முக்கிய ஆவணங்களை பதிவு செய்ய வேண்டும்.
- இதன் பிறகு ஒப்புதல் கிடைத்தவுடன் இணையதளம் அல்லது செல்போன் ஆப் மூலம் ஆயுஷ்மான் பாரத் கார்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- குறிப்பாக வயதானவர்கள் நேரில் பதிவு செய்ய முடியாவிட்டால் Beneficiary login மூலம் நெருங்கிய உறவினர்கள் பதிவு செய்ய உதவலாம்.